ஒளியோன்

ஒளியாய் விளங்குபவன்

உலகம் முழுவதும் நடப்பதை ஒரே பார்வையில் காணுங்கள்

தலைக்கு மேல் பறக்கும் விமானங்கள், வானில் கடக்கும் செயற்கைக்கோள்கள், நிலநடுக்கம், புயல், காற்றின் தரம் — பொதுவில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு, உலகிலிருந்து இந்தியா, தமிழ்நாடு, உங்கள் ஊர் வரை நேரலையில் பாருங்கள்.

முற்றிலும் இலவசம் — பதிவு செய்த உறுப்பினர்கள் எல்லோருக்கும்

என்னவெல்லாம் பார்க்கலாம்

ஒவ்வொன்றையும் ஒரு தொடுதலில் இயக்கலாம், நிறுத்தலாம்.

நேரலை விமானங்கள்

எந்த விமானத்தையும் தொட்டால் — நிறுவனம், உயரம், வேகம், எங்கிருந்து எங்கே என்று தெரியும்; கேமரா அதனுடன் பயணிக்கும்.

செயற்கைக்கோள்கள்

விண்வெளி நிலையமும் இந்தியச் செயற்கைக்கோள்களும் எங்கே இருக்கின்றன, உங்கள் வீட்டின் மேல் எப்போது கடக்கும் என்று முன்கூட்டியே சொல்லும்.

பேரிடர் எச்சரிக்கைகள்

புயல், வெள்ளம், எரிமலை, காட்டுத் தீ — வங்கக் கடல், அரபிக் கடல் புயல்கள் உட்பட, உலகம் முழுவதும் எச்சரிக்கை நிலையுடன்.

நிலநடுக்கங்கள்

கடந்த 24 மணி நேரத்தின் நிலநடுக்கங்கள், அளவும் ஆழமும் சேர்த்து; இந்தியப் பகுதிக்குச் சிறிய அதிர்வுகளும் தெரியும்.

வானிலையும் காற்றும்

இந்திய நகரங்களின் வெப்பம், மழை, காற்றின் தரம் — நம் CPCB அளவுகோலில்.

வரைபடம், செயற்கைக்கோள் படம்

தெரு வரைபடமோ செயற்கைக்கோள் படமோ — ஒரு தொடுதலில் மாற்றுங்கள்; முப்பரிமாண உருண்டையாகவோ தட்டையாகவோ பாருங்கள்.

தரவு எங்கிருந்து வருகிறது

இது உளவுச் செயற்கைக்கோள் அல்ல. விமானங்களின் ADS-B ஒலிபரப்பு, செயற்கைக்கோள் சுற்றுப்பாதைத் தரவு, அரசு நிலநடுக்க, பேரிடர், வானிலை அறிக்கைகள் — எல்லோருக்கும் திறந்து வைக்கப்பட்டவற்றை மட்டுமே ஒன்றாகக் காட்டுகிறோம்.

எல்லா மூலங்களும் உரிமங்களும் →