விழி பற்றி

விழி — என்ன, ஏன்

விழி உலகம் முழுவதும் இப்போது நடப்பவற்றை ஒரே உருண்டையில் காட்டுகிறது: வானில் பறக்கும் விமானங்கள், சுற்றும் செயற்கைக்கோள்கள், நிலநடுக்கங்கள், புயல்களும் பேரிடர்களும், நகரங்களின் வானிலையும் காற்றின் தரமும், விண்வெளி வானிலையும். உலகிலிருந்து இந்தியா, மாநிலம், மாவட்டம், உங்கள் ஊர் வரை நெருங்கிப் பார்க்கலாம்.

இது உளவுக் கருவி அல்ல. பொதுவில், எல்லோருக்கும் திறந்து வெளியிடப்படும் தரவுகளை மட்டுமே ஒன்றாகக் கொண்டுவருகிறோம் — விமானங்கள் தாமே ஒலிபரப்பும் ADS-B சமிக்ஞைகள், அறிவியல் அமைப்புகள் வெளியிடும் செயற்கைக்கோள் சுற்றுப்பாதைகள், அரசு, ஐ.நா. அமைப்புகளின் நிலநடுக்க, பேரிடர், வானிலை அறிக்கைகள். ஒவ்வொரு தரவும் எங்கிருந்து வருகிறது என்பதை மூலங்கள் பக்கத்தில் காணலாம்.

யார் பயன்படுத்தலாம்

பதிவு செய்த எல்லோருக்கும் முற்றிலும் இலவசம். கடவுச்சொல் தேவையில்லை: மின்னஞ்சல் குறியீடு அல்லது Google மூலம் உள்நுழையலாம். ஒரே கணக்கு எல்லா ஒளியோன் ஆய்வகக் கருவிகளிலும் செல்லும். கணக்குகள் 18 வயது நிறைந்தோருக்கு மட்டும்.

உங்கள் இடம்

‘என் இடம்’ பொத்தானை அழுத்தினால் உங்கள் உலாவி உங்கள் இருப்பிடத்தைக் கேட்கும்; அது உங்கள் சாதனத்திலேயே உருண்டையை நகர்த்தப் பயன்படும், எங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. நீங்களாக ‘வீடாகச் சேமியுங்கள்’ என்றால் மட்டுமே அந்த இடம் உங்கள் கணக்கில் சேமிக்கப்படும் — உங்கள் வீட்டின் மேல் செயற்கைக்கோள்கள் எப்போது கடக்கும் என்று சொல்ல. அதை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.

எச்சரிக்கை

ஒளியோன் ஆய்வகக் கருவிகள்

நிகண்டு, சுழி, செப்பம், அணு, தூது, இலக்கம், விழி — ஒளியோன் ஆய்வகத்தின் இலவசக் கருவிகள்.